×

ராணுவ இடத்தில் விதிமீறி கட்டிய கோயில் கட்டுமானம் இடிப்பு: பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

 

ஆலந்தூர், ஜூலை 18: மீனம்பாக்கம் குளத்துமேடு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் கார்டு, மின்சாரம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்றுள்ளனர். இந்த பகுதியில் புதிதாக வீடு கட்டவோ, மாற்றி அமைக்கவோ ராணுவம் தடை விதித்துள்ளது.

இந்த குளத்துமேடு பகுதியில் கருமாரியம்மன் ஆலயம் உள்ளது. இங்கு, சங்கர் (80) என்பவர் பூசாரியாக உள்ளார். இந்த கோயிலை விரிவாக்கம் செய்ய கடந்த வாரம் கட்டுமான பணியை இவர் தொடங்கியுள்ளார். இதுபற்றி அறிந்த 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் நேற்று மதியம், துப்பாக்கி ஏந்தியபடி அங்கு வந்து, கோயில் கட்டுமான பணியை அனுமதி பெறாமல் எப்படி தொடங்கினீர்கள் என எச்சரித்து, கட்டுமானங்களை இடித்தனர்.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் மக்களை விரட்டினர் இந்நிலையில், அங்கு வந்த மீனம்பாக்கம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ராணுவ இடத்தில் விதிமீறி கட்டிய கோயில் கட்டுமானம் இடிப்பு: பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Alandur ,Kulathumedu ,Meenambakkam ,
× RELATED விருகம்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரவுடி கைது