×

ஆஸி.க்கு எதிரான டி 20 தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: ஆண்ட்ரூ ரசல் அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ்: வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான ரசல், அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளுடன் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், IPL, BBL, PSL உள்ளிட்ட கிளப் தொடர்களில் தொடர்ந்து விளையாட உள்ளார்.

இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ரசல் விளையாடியுள்ளார். 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 1,078 ரன்கள் எடுத்துள்ளார். 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 1,034 ரன்கள் எடுத்து, 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற ரசல் முக்கிய பங்காற்றினார்.

The post ஆஸி.க்கு எதிரான டி 20 தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: ஆண்ட்ரூ ரசல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : T20 ,Australia ,Andrew Russell ,West Indies ,Andre Russell ,Russell ,Australia… ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!