- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வாழுவூர்
- மயிலாடுதுறை
- குத்தாலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திராவிட முன்னேற்ற கழகம்
- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- தரங்கம்பாடி சாலை
- தர்மபுரம்…
குத்தாலம்,ஜுலை 17: தமிழ்நாடு முதலமைச்சரும்,திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி சாலை வழியாக ரோடு சோவில் வந்து கொண்டிருக்கும்போது தருமபுரம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கை கொடுத்து மற்றும் செல்பி எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கண்ணாரத்தெரு,சீனிவாசபுரம்,பேச்சாவடி, எலந்தங்குடி வழியாக நேற்று மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் கிழக்கு ஒன்றியம் வழுவூர்(பண்டாரவடை முகப்பில்) சிலை அமைப்பாளரும், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி.எஸ்.பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஏற்பாட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சுமார் 9 அடி உயரம் உள்ள வெண்கல திருவுருவ சிலையை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சரும்,திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனை முன்னிட்டு மயிலாடுதுறையிலிருந்து வழுவூர் செல்லும் வரை திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடிகள்,தோரணங்கள் மற்றும் பெரியார்,அண்ணா,கலைஞர் மு.க.ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் இவர்களின் படங்களுடன் பிரம்மாண்டமான தோரணங்கள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் மேளதாளங்கள்,கச்சேரிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன்,சாலையின் இரு புறமும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்,பொதுமக்களும் முதலமைச்சரை வரவேற்றனர்.
இந்த சிலையை திறப்பு நிகழ்வில் கழக முதன்மைச் செயலாளர்,மண்டல பொறுப்பாளர்,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு,வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்,மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், திமுக மாநில விவசாய அணி இணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன்,கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் க.அன்பழகன், மயிலாடுதுறை நகரக் கழக செயலாளரும்,நகர் மன்ற தலைவருமான குண்டாமணி(எ)செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளரும் தஞ்சை மண்டல பொறுப்பாளருமான பி.எம்.தர், மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் இராம.சேயோன்,குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை.சங்கர், குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஆர்.ராஜா, டாக்டர் கலைஞர் நினைவு உதவித் தொகை திட்டம் திட்ட ஒருங்கிணைப்பாளரும்,கழக வழக்கறிஞருமான இரா.க.புகழரசன் உள்ளிட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் மகேந்திரன், மனோகரன்,மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் முருகப்பா, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய,பேரூர், கிளை கழக நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்கள் என 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழுவூர் வி.எஸ்.பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
முதலமைச்சரின் நிகழ்ச்சிகளுக்கு திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோஷிநிர்மல்குமார் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
The post மயிலாடுதுறை அருகே வழுவூரில் கலைஞர் முழு உருவ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
