×

கிளியனூர் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பேர் கைது

 

வானூர், ஜூலை 17: வானூர் தாலுகா தென்கோடிப்பாக்கம் கிராமத்தில் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூர் போலீசார், வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 8 மூட்டை குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் புகையிலை பொருட்கள் கடத்திவந்தது புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (46), மயிலாடுதுறை கூட்டுறவு நகரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா (54) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் குட்கா பொருட்களை எங்கிருந்து எடுத்து வந்து எந்த பகுதியில் விற்பனை செய்ய இருந்தனர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கிளியனூர் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Klianur ,Vanur ,Klianur police ,Puducherry-Thindivanam National Highway ,Thenkodipakkam ,Vanur taluka ,Tindivanam ,Puducherry ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா