×

பெண் தூக்கிட்டு தற்கொலை

 

வானூர், ஜூலை 17: வானுார் தாலுகா காசிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சித்ரா (35), இவருக்கு சசிக்குமார், தயாநிதி என இரு மகன்களும், கோவர்தினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவின் கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் மூத்த மகன் சசிக்குமார் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த 15ம் தேதி வேலைக்கு செல்லாமல் இருந்த சசிக்குமாரை, சித்ரா கண்டித்துள்ளார்.

அதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த சித்ரா வீட்டில் துாக்குப்போட்டு தொங்கியுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சித்ராவின் தாய் வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vanur ,Chitra ,Mariamman Koil Street, Kasipalayam, Vanur taluka ,Sasikumar ,Dayanidhi ,Govardini ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா