விருதுநகர், ஜூலை 17: விருதுநகர் நகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்த குறைபாடுகளை வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கமிஷனர் சுகந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து விருதுநகர் நகராட்சி கமிஷனர் சுகந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகராட்சி சார்பாக பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான சொத்துவரி விதிப்பு, கட்டிட வரைபடம், குடிநீர் விநியோகம்,
குழாய் உடைப்புகள், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் குறைபாடுகள் ஏற்பட்டு இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு புகைப்படமாகவோ, குறுஞ்செய்தியாகவோ 94885 09250 என்ற அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
The post நகராட்சி மக்கள் புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.
