×

தடை செய்யப்பட்ட மாத்திரை விற்ற இருவர் மீது வழக்கு

 

கூடலூர், ஜூலை 17: லோயர்கேம்ப் பேருந்து நிலையம் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின்பேரில், குமுளி எஸ்ஐ மாயாண்டி அவரை சோதனை செய்ததில், மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் பொதுமக்களுக்கு விற்க தடை செய்யப்பட்ட 30 மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார் விசாரித்ததில், அவர் லோயர் கேம்ப் கடைவீதி தெருவை சேர்ந்த சுரேஷ் (51) என்பதும், அவர் லோயர்கேம்ப் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ராஜன் என்பவரிடம் மாத்திரைகளை வாங்கியதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் சுரேஷ் மற்றும் ராஜன் ஆகிய இருவர் மீதும் குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post தடை செய்யப்பட்ட மாத்திரை விற்ற இருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Lower Camp ,Kumuli SI Mayandi ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா