×

மயிலாடுதுறை அருகே வழுவூர் வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

குத்தாலம்,ஜூலை 16: தமிழ்நாடு முதலமைச்சரும்,திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் கிழக்கு ஒன்றியம் வழுவூர்(பண்டாரவடை முகப்பில்) புதியதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சுமார் 9 அடி உயரம் உள்ள வெண்கல திருவுருவ சிலையை காலை 9.00 மணி அளவில் திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை முன்னிட்டு மயிலாடுதுறை நகரப் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடிகள்,தோரணங்கள், சாலையை முழுவதும் வாழை மரங்கள் மற்றும் பெரியார்,அண்ணா,கலைஞர் மு.க.ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் இவர்களின் படங்களுடன் பிரம்மாண்டமான தோரணங்கள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனை கழக முதன்மைச் செயலாளர்,மண்டல பொறுப்பாளர்,நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் ஆகியோரின் நேரடி பார்வையில் விழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய,பேரூர், கிளை கழக நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழுவூர் வி.எஸ்.பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

The post மயிலாடுதுறை அருகே வழுவூர் வருகை தரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Vazhuvur ,Mayiladuthurai ,Kuttalam ,Dravida Munnetra Kazhagam ,M.K. Stalin ,Bandaravadi ,Kuttalam East Union, ,Mayiladuthurai district ,Tamil ,Nadu ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா