×

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு: அமலாக்க துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், பதினைந்து நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும் என்று கூறினார். உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்களே நினைத்தாலும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது.

டிரம்ப் வெளியேற்றி விடுவார் என நகைச்சுவையாக குறிப்பிட்டனர். அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரஜ்னீஷ் பத்தியால் ஆஜரானார். இதனையடுத்து, பயணத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அசோக்குமார் தரப்புக்கும், மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 22ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு: அமலாக்க துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,America ,HC ,Enforcement Department ,Chennai ,Principal Sessions Court ,Ashok Kumar ,Madras High Court ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!