- விஜய்
- அமைச்சர்
- Duraimurugan
- வேலூர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சிதம்பரம்
- காட்பாடி செங்குட்டை
- கலெக்டர்
- சுப்புலட்சுமி
- நீர் வளங்கள்
வேலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து காட்பாடி செங்குட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்க்கட்சியாக இருந்தபோது, மனுக்களை வாங்கினோம். அதுமாதிரி பல மனுக்களை இப்போது வாங்குறோம். அதற்காகத்தான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று பெயர் வைத்துள்ளோம். யாரோ ஒரு காலி பையன் தான் கலைஞர் சிலை மீது கருப்பு மையை ஊற்றி இருக்கான். புத்தக விழாவில் சீனியர்கள் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்கு, நான் அவருக்கே போன் செய்து பேசினேன். ரொம்ப தேங்க்ஸ் சார் இப்பவாவது மறக்காமல் பேசி இருக்கிறீர்களே என்று கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, ‘நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்துவிடுங்கள்’ என தவெக தலைவர் விஜய் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, ‘ஏன் அவர் கேள்வி கேட்பதற்கு கூட வரமாட்டாரா? எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அவர் வந்த காலத்துக்கு பார்த்துக்கலாம்’ என்றார்.
The post கேள்வி கேட்கக்கூட விஜய் வரமாட்டாரா? எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.
