×

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை (16.07.2025) கனமழை பெய்யக்கூடும்.

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தில் கனமழை நீடிக்கும். கோவை மாவட்டத்தில் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 17 மற்றும் 18ம் தேதிகளில் தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால், மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

சென்னையில் குறைந்த பட்சம் 100 டிகிரி அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி வரை இருக்கும்.
மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். வங்க கடல் பகுதியில், தென்மேற்கு- மத்திய மேற்கு வங்க கடலின் சில பகுதிகள், தெற்கு வங்க கடலின் தெற்கு பகுதிகளில் இன்று, சூறாவளிக்காற்று மணிக்கு 60கிமீ வேகத்தில் வீசும். இது 18ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்

 

 

 

The post தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Govai ,Tenkasi ,Nella ,Kanyakumari ,Neelgiri ,Tiruppur ,Dindigul ,Theni ,Virudhunagar ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவு