×

கறம்பக்குடி அருகே பராமரிப்பின்றி சேதமான வெள்ளாள கொள்ளை சாலை

 

கறம்பக்குடி, ஜூலை 14: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், பிலாவிடுதி ஊராட்சியில் பிலா விடுதி, செவ்வாய்ப்பட்டி, அம்மாணிபட்டு பட்டமா விடுதி, கூத்தம்பட்டி, மானிய வயல்,வெள்ளாள கொள்ளை போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளன. கரம்பக்குடி, வெள்ளாள கொள்ளை சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள சாலையாக அமைந்துள்ளது.

வெள்ளாளக் கொள்ளை கிராமத்திற்கு செல்லும் சாலையானது பல ஆண்டுகளாக பழுதடைந்து ஜல்லிக்கட்டில் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. வெள்ளாளக் கொள்ளை கிராம மக்கள் சாலையை சீரமைக்க கோரி பல தடவை ஊராட்சி ஒன்றியத்திடமும், திராவிடதி ஊராட்சி நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளனர்.

எனவே, பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படும் வெள்ளாளக் கொள்ளை தார் சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென பயன்பாட்டிற்கு விட வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

 

The post கறம்பக்குடி அருகே பராமரிப்பின்றி சேதமான வெள்ளாள கொள்ளை சாலை appeared first on Dinakaran.

Tags : Vellala Kollai road ,Karambakudi ,Pila Dhanana ,Sevvaipatti ,Ammanipattu ,Patama Dhanana ,Koothampatti ,Maniyavayal ,Vellala Kollai ,Pudukkottai district ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா