×

ஃபிபா கிளப் இறுதிச்சுற்றில் வெல்ல முடியாத பிஎஸ்ஜி விட்டு கொடுக்காத செல்ஸீ: வாகை சூடினால் ரூ.1080 கோடி பரிசு

நியுயார்க்: அமெரிக்காவில் நடந்து வரும் கிளப்களுக்கு இடையிலான ஃபிபா கிளப் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு நடைபெற உள்ளது. அதில் செல்ஸீ (இங்கிலாந்து) – பிஎஸ்ஜி என்கிற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணிகள் களம் காண உள்ளன. நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), முன்னாள் சாம்பியன்கள் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பேயர்ன் மியூனிக் (ஜெர்மனி) ஏற்கனவே வெளியேறி விட்டன.

எஞ்சியது, முன்னாள் சாம்பியன் செல்சியா மட்டும்தான். ஏற்கனவே 2021ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற செல்ஸீ 2012ம் ஆண்டு இறுதி ஆட்டத்திலும் விளையாடி உள்ளது. இது அந்த அணிக்கு 3வது இறுதி ஆட்டம். ஆனால் பிஎஸ்ஜி முதல் முறையாக கிளப் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் களம் காண காத்திருக்கிறது. இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத அணியாக பிஎஸ்ஜி உள்ளது.

ஆனால் செல்ஸீ லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 அணிகளும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் பிஎஸ்ஜி 3, செல்ஸீ 2 ஆட்டங்களில் வென்று இருக்கின்றன. மேலும் 3 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன. கிளப் உலக கோப்பையில் முதல் முறையாக இப்போதுதான் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. வெற்றி பெறும் அணிக்கு, பரிசுத் தொகையாக, ரூ. 1080 கோடி கிடைக்கும்.

The post ஃபிபா கிளப் இறுதிச்சுற்றில் வெல்ல முடியாத பிஎஸ்ஜி விட்டு கொடுக்காத செல்ஸீ: வாகை சூடினால் ரூ.1080 கோடி பரிசு appeared first on Dinakaran.

Tags : Chelsea ,FIFA Club Final ,New York ,FIFA Club Cup ,United States ,England ,PSG ,Paris Saint-Germain ,France ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!