×

மேஜர் லீக் டி20 கிரிக்கெட் வெற்றி கோப்பை யாருக்கு? நியுயார்க் வாஷிங்டன் மோதல்

டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட்(எம்எல்சி) டி20 கிரிக்கெட் போட்டியின் சவால் சுற்று நேற்று நடந்தது. அதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்-எம்ஐ நியூயார்க் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியுயார்க், பந்து வீச்சை தேர்வு செய்ய, டெக்சாஸ் அதனை எதிர்கொண்டது. நியுயார்க் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெக்சாஸ் அணி வீரர்கள், அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுடன் விக்கெட்களை பறிகொடுத்தனர்.

அந்த அணியில் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இணை சேர்ந்த அகீல் ஹோசின் 55 (32பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), டொனோவன் ஃபெரைரா 32 (20பந்து, 3பவுண்டரி, 1 சிக்சர்) ரன் விளாசி ஆட்டமிழக்காமல் 6 வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர். அதனால் டெக்சாஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

அதனையடுத்து 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியுயார்க் விளையாடியது. குயின்டன் டிகாக் 6, மைக்கேல் பிரேஸ்வெல் 8 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் மோனக் படேல் 49 (39 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஆட்டமிழக்காமல் கேப்டன் நிகோலஸ் பூரன் 52 (36 பந்து, 4 பவுண்டரி, 3சிக்சர்), கைரன் பொல்லார்ட் 47 (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் விளாசி அணியை 19வது ஓவரிலேயே கரை சேர்த்தனர்.

அதனால் அந்த அணி 3விக்கெட்களை மட்டுமே இழந்து 172 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியுயார்க் 2வது முறையாக எம்எல்சி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அதையடுத்து, லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் வென்று முதலிடம் பிடித்த கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான நடப்பு சாம்பியன் வாஷிங்டன் ஃபிரீடம் அணியுடன், இறுதிப் போட்டியில் நியுயார்க் அணி மோத உள்ளது. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது.

The post மேஜர் லீக் டி20 கிரிக்கெட் வெற்றி கோப்பை யாருக்கு? நியுயார்க் வாஷிங்டன் மோதல் appeared first on Dinakaran.

Tags : Major League T20 Cricket Victory Cup ,Washington ,New York ,Dallas ,Major League Cricket (MLC) T20 cricket match ,Texas Super Kings ,MI ,York ,Texas ,New York Ball ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!