×

தமிழகத்தில் அதிமுக தனித்துதான் ஆட்சி: எடப்பாடி பேட்டி

புதுச்சேரி: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜ தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அளித்த பேட்டியிலும் கூட்டணி ஆட்சிதான் என்று கூறி உள்ளார். இதற்கு பதிலடியாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதல் கடலூர் மாவட்டத்தில் எழுச்சி பயணம் மேற்கொள்கிறார்.

நேற்று விழுப்புரம் பயணத்தை முடித்துவிட்டு இரவில் புதுச்சேரி அருகே உள்ள பூரணாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக அவர், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்’’ என்றார். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என்று கூறிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதை மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post தமிழகத்தில் அதிமுக தனித்துதான் ஆட்சி: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Edappadi ,Puducherry ,Bajaj ,Supreme Leader ,Union Interior Minister ,Amit Shah ,Adimuka Sathutthun Raji ,
× RELATED கேரம் உலகக் கோப்பை போட்டியில்...