×

வடக்கன்குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், பெருங்குடி பகுதி-1 கிராமம், வடக்கன்குளம் குழந்தைகள் இல்லத்திலுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், மாறாந்தை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் – ராமலெட்சுமி தம்பதியரின் மகன் செல்வன். சேர்மதுரை (வயது 12) என்பவர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், பெருங்குடி பகுதி-1 கிராமம்,

வடக்கன் குளம் CMS குழந்தைகள் இல்லத்தில் தங்கி அருகிலுள்ள கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்றுவந்த நிலையில் கடந்த 8.7.2025 அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் CMS குழந்தைகள் இல்ல வளாகத்தில் பயன்பாட்டில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post வடக்கன்குளம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Nathakankulam ,K. Stalin ,Chennai ,MLA ,Tirunelveli district ,Radhapuram Vatom, Perunkudi region-1 village ,Vadakkankulam ,Children's Home ,Mariyappan ,Tenkasi District ,Alankulam Circle ,Maranthai Village ,
× RELATED கேரம் உலகக் கோப்பை போட்டியில்...