×

இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம்: இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு

சென்னை: இளம் கலைஞர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தகுதிவாய்ந்த இளம் கலைஞர்களுக்கு கலை நிறுவனங்களில் வாயிலாக கலைநிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், இளம் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு தமிழகத்தில் சிறப்புடன் செயல்படும் கலை நிறுவனங்களில் வாயிலாக தலா மூன்று கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலை நிறுவனங்களுக்கு நிதியுதவியும், கலைஞர்களுக்கு மதிப்பூதியமும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களின் பெயர் பட்டியல்:
குரலிசை கலைஞர்கள்: பா.ஹரிப்பிரியா – மதுரை, கி.மீரா – கோவை, பி.மதுஸ்ரீ- மதுரை, ப்ரீத்தி சேதுராமன் – சென்னை, சமன்விதா ஜி.சாசிதரன் – சென்னை, வி.லாவண்யா – சென்னை, எஸ்.ஸ்வராத்மிகா – சென்னை, நந்திதா கண்ணன் – சென்னை, வெ.கன்யாகுமரி – கோவை, வி.கிருஷ்ண சாய் – வி.முகுந்த சாய் – சென்னை
தனி வயலின் கலைஞர்கள்: முகுந்தன் சாம்ராஜ் – மயிலாடுதுறை – ஆர்.ஸ்ரீ கிருதி – சென்னை
சாக்ஸபோன் கலைஞர்: டி.ஜி.என்.திருவருள் -சென்னை
கதாகலட்சேபம் கலைஞர்: ஹ.அனன்யா – சென்னை
நாதஸ்வரம் கலைஞர்கள்: ஷி.கேசவராஜ் – காஞ்சிபுரம், நி.உதயகுமார் – திருவள்ளூர்
பக்கவாத்தியம்: மா.கோகுல கிருஷ்ணன் – திருவாரூர்
மிருதங்க கலைஞர்கள்: ச.முத்துகுமரன் – மதுரை, ஹ.அபினவ் சங்கர் – மதுரை, எஸ்.விக்னேஷ் – மதுரை, ஐஸ்வர்யா – சென்னை, அநிருத். ஸ்ரீ – சென்னை, ஆர்.லட்சுமண் – சென்னை, கி.சாய் பிரசாத் – சென்னை, ராம்ஸ்மரண் கிருஷ்ணகுமார் – சென்னை, என்.ராமகிருஷ்ணன் – சென்னை, சஞ்சய் வேதாந்த் – சென்னை
கஞ்சிரா கலைஞர்: வி.முகுந்தசாய் – சென்னை
கடம் கலைஞர்: தி.ஆனந்த்மகராஜ் – சென்னை
பரதநாட்டிய கலைஞர்கள்: கீர்த்தனா சுப்பிரமணியன் – சென்னை, ஆ.சூர்யகலா-கிருஷ்ணகிரி, வைஷ்ணவி ஸ்ரீநிவாசன் – சென்னை, கோ.ஜாஹ்னவி – சென்னை, ம.அஷயா ஸ்ரீலலிதா-சென்னை, மானாசா ஸ்ரீராம்- சென்னை, வைஷாலி- சென்னை, சஹானா சுகுமார் – சென்னை, ஆர்.வனமாலிகா – சென்னை, ஹேமாவதி கலையரசன் – சென்னை, சாத்விகா கோபிநாதன் – சென்னை, எஸ்.மவுமிதா – சென்னை, ஷித்திகா பி.நாயர் – சென்னை
கிராமியக் கலைஞர்கள்: எம்.சங்கீத் ஸ்ரீராம் (பொம்மலாட்டம்) – தஞ்சாவூர், கு.ஜெயபிரசாத் (ஒயிலாட்டம்) – மதுரை, பா.கணபதி (ஒயிலாட்டம்) – மதுரை, வெ.விக்னேஷ் (கைசிலம்பம்) – திருப்பத்தூர் சு.பிரபு (கைசிலம்பம்) – திருப்பத்தூர், சு.வி.ரமணன் (கரகம்) சென்னை.

The post இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம்: இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Eyal Isai Natak Manram ,Chennai ,Tamil Nadu Eyal Isai Natak Manram ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்