×

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து நகர்மன்ற தலைவர் ஆய்வு

 

திருத்துறைப்பூண்டி, ஜுலை 9: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. 24 வார்டுகளிலும் முதல் கட்டமாக வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தவர் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அதன் பிறகும் தினந்தோறும் வார்டுகளில் நடக்கும் பணிகளை காலை 5 மணி முதல் பார்வையிட்டு வருகிறார். இந்த நிலையில்18வது வார்டு வஉசி நகர் பகுதியில் பொதுமக்களிடம் குடிநீர் மற்றும் சுகாதாரம் பற்றி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்யன் கேட்டறிந்தார். இதில் ஆணையர் துர்கா, பொறியாளர் வசந்தன், சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து நகர்மன்ற தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruthuraipoondi Municipality ,Tiruthuraipoondi ,Municipal Chairman ,Kavita Pandian ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா