×

அண்ணாசாலை உள்பட 4 கோட்டங்களுக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

சென்னை: அண்ணாசாலை உள்பட 4 கோட்டங்களுக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அண்ணாசாலை கோட்டம்அண்ணாநகர் எச்- பிளாக்கில் உள்ள அண்ணாநகர் கோட்டம்கே.கே.நகர் துணை மின்நிலையத்தில் உள்ள கிண்டி கோட்டம் மற்றும் வேண்பாக்கம் துணை மின்நிலையத்தில் உள்ள பொன்னேரி கோட்டம் என 4 கோட்டங்களுக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்செயற்பொறியாளர் தலைமையில் வரும் 8ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சார துறை தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்து விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அண்ணாசாலை உள்பட 4 கோட்டங்களுக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Annasalai ,Chennai ,Consumer Reduction Meeting ,Annasalai Kotamke ,Annanagar H-Block ,Sindathiripetta ,K. Nagar ,
× RELATED மக்கள் தொகை உள்ளிட்ட முக்கிய...