×

வேளாண் உரிமைக்காக போராடி உயிர்நீத்த 59 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பேரணி

 

க.பரமத்தி, ஜூலை 6: தென்னிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வேளாண் உரிமைக்காக போராடி 59 உயிர்களை தியாகம் செய்து மின் இணைப்பு பெற்றுக் கொடுத்த தியாகிகளுக்கு வீரவணக்க பேரணி நடைபெற்றது.
க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை கடைவீதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் வேளாண் உரிமை மின்சார இணைப்பு பெற்றிருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுதோறும் சராசரியாக 1,10,000 மின் கட்டணம் செலுத்துவதை 20ஆண்டுகள் தொடர்ந்து போராடி 59 உயிர்களை தியாகம் செய்து உரிமைகளை பெற்றுக் கொடுத்த உழவர் போராளிகளுக்கு வீரவணக்க பேரணி தென்னிலை கடைவீதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் முன்பு தொடங்கி தென்னிலை பேருந்து நிறுத்தம் வரை பேரணி நடைபெற்றது.

The post வேளாண் உரிமைக்காக போராடி உயிர்நீத்த 59 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Day ,K.Paramathi ,South ,Tamil Nadu Farmers' Protection Association ,K.Paramathi Union ,South… ,Dinakaran ,
× RELATED மாவட்ட நிர்வாகம் தகவல் பாலாலயம்...