அகமதாபாத்: கொரோனாவுக்குப் பிறகு குஜராத் உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு தொடுத்தவர்கள் மெய்நிகர் முறையில் விசாரணையில் ஆஜராக அனுமதித்துள்ளது. கடந்த மாதம் 20ம் தேதி நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா, ஆர்.டி.வச்சானி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பாக அடிதடி வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடுத்த வாலிபர் அப்துல் சமத் மற்றும் வழக்கறிஞர்கள் மெய்நிகர் முறையில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் அப்துல் சமத் கழிப்பறையில் இருந்தபடி விசாரணையில் பங்கேற்றார். யூடியூப் நேரலை மூலம் இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அதன் அடிப்படையில் குஜராத் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை ஏற்று, அப்துல் சமத் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. யூடியூப்பில் இருந்து இந்த வீடியோவை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post மெய்நிகர் விசாரணையில் கழிப்பறையில் இருந்தபடி ஆஜரான குஜராத் வாலிபர் மீது நடவடிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது appeared first on Dinakaran.