சென்னை: மாம்பழம் விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழம் விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் தர்பூசணி பழம் பருவகாலங்களின் விளைச்சலின் போதும், தர்ப்பூசணியில் மருந்து கலந்து உள்ளது என்று வதந்திகளை பரப்பியதால் மிகக் குறைந்த விலைக்கு போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
இப்படி தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக விவசாயிகள் பிரச்னையில் கவனம் செலுத்தி, அவர்கள் விளைவித்த பொருளுக்கான உரிய விலையை கிடைக்கச் செய்ய வேண்டும். மாம்பழ விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு இந்த அரசு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கி விவசாயிகளைக் காக்க வேண்டும்.
The post மாம்பழ விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.
