×

கோரிக்கைகள் தொடர்பாக நடிகர் விஜயுடன் சந்திப்பா? ஜாக்டோ – ஜியோ மறுப்பு

சென்னை: ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தவெக தலைவர் நடிகர் விஜயை, தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் மாயவன் மற்றும் அதன் பிரதிநிதிகள், கடந்த 13ம் தேதி சந்தித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேசியதாக பல்வேறு ஊடங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கைகளின் விளைவாக அரசிடம் இருந்து சரண்டர், மகப்பேறு விடுப்பு, பணி வரன்முறையில்சேர்ப்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகள் பெற்றுள்ளோம். பழைய ஓய்வு ஊதியத்துக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்ைக 30.9.2025க்குள் பெறப்படும் உன உத்ரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசிடம் இருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து தற்காலிகமாக அமைப்பின் நடவடிக்கைகளை ஒத்தி வைத்துள்ளோம்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர் அமைப்புகள் சார்பாக பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும். இந்த அமைப்பில் பங்கேற்றுள்ள அந்தந்த சங்கங்களின் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கு ஏற்ப தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவாகும். அதற்கும் ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எனவே, ஜாக்டோ-ஜியோ சார்பாக நடிகர் விஜயை, ஒரு சங்கத்தின் தலைவர் சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

The post கோரிக்கைகள் தொடர்பாக நடிகர் விஜயுடன் சந்திப்பா? ஜாக்டோ – ஜியோ மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Vijay ,JACTO-Jio ,Chennai ,Tamil Nadu Higher Secondary and Postgraduate Teachers Association ,TNHSPA ,president ,Mayavan ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறை அரசு...