×

கருமண்டபம் அருகே காலி மனையில் தீ

 

திருச்சி, ஜூன், 14: திருச்சி, கருமண்டபம், இளங்காட்டு மாரியம்மன் கோயில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் காலி மனையில் தீ பற்றி எரிவதாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருச்சி தீயணைப்பு துறை நிலை அலுவலர் போக்குவரத்து ரமேஷ் தலைமையிலான 5 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், குடியிருப்பு பகுதிக்குள் அதிக குப்பை தேங்கி இருந்ததால் அதை குடியிருப்பு வாசிகள் காலி மனையில் வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளனர். அதனால் தீ சற்று அதிகமாக எரிந்துள்ளது. ஆனால் பெரிய சேதம் ஏற்படும் அளவிற்கு தீ இல்லை என்றனர்.

The post கருமண்டபம் அருகே காலி மனையில் தீ appeared first on Dinakaran.

Tags : Karumandapam ,Trichy ,Trichy Fire Department ,Ilangattu Mariamman Temple ,Karumandapam, Trichy ,Trichy Fire Department… ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...