×

அதிமுக-பாஜ கூட்டணியா? எடப்பாடிக்கிட்ட கேளுங்க… செல்லூர் ராஜூ டென்ஷன்

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே ஏற்குடி அச்சம்பத்தில் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தால் அனைவரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். அதிமுக – பாஜ கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். கூட்டணி குறித்து எங்களிடம் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். அமித்ஷாவிடம் பேசியது குறித்தும், கூட்டணி குறித்தும் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறி விட்டார். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும்’’ என்றார்.

The post அதிமுக-பாஜ கூட்டணியா? எடப்பாடிக்கிட்ட கேளுங்க… செல்லூர் ராஜூ டென்ஷன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…