×

ரூ.7.10 கோடி மதிப்பீட்டில் கேப்டன் காட்டன் கால்வாய் சீரமைப்பு பணி தொடக்கம்

பெரம்பூர், மே 17: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் வடக்கு கொடுங்கையூர் கெனால் தெற்கு கொடுங்கையூர் கெனால், கேப்டன் காட்டன் கெனால், எம்.கே.பி நகர் 37வது வார்டில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கேப்டன் காட்டன் கெனால் ஆகிய கெனால்களில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வெளியே வருவதாகவும் இதில் கரையை உயர்த்தி கெனால் தளங்கை உயர்த்தி ல்களை பலப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். முதற்கட்டமாக நேற்று 37வது வார்டுக்கு உட்பட்ட எம்.கே.பி நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் நடுவே அமைந்துள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் இருந்து மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறுவதை தடுக்கவும் கெனாலை உயர்த்தவும் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியே வராதவாறு தடுக்கும் வகையில் பல்வேறு கட்டமைப்புகளை வலுப்படுத்த பூமி பூஜை போடப்பட்டது. அந்த வகையில் மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து 7 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த கேப்டன் காட்டன் கால்வாயை சீரமைக்கும் பணிகள் நேற்று காலை தொடங்கப்பட்டன. பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன். 37வது மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு ஆகியோர் கலந்து கொண்டு இந்த பணிகளை தொடங்கி வைத்தனர். இதில், தண்டையார்பேட்டை மண்டல செயற்பொறியாளர் ஹரி நாத் உதவி செயற்பொறியாளர்கள். பொறியாளர்கள். மாநகராட்சி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ரூ.7.10 கோடி மதிப்பீட்டில் கேப்டன் காட்டன் கால்வாய் சீரமைப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Captain Cotton ,Canal ,Perambur ,North Kodungaiyur Canal ,South Kodungaiyur Canal ,Captain Cotton Canal ,North ,South Captain Cotton Canal ,Ward 37 ,MKB Nagar ,Assembly ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.489...