×

ஜெட் வேகத்தில் 4,000 சூர்யகுமார் சாதனை

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் 45வது லீக் போட்டியில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அவர், ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்களை அதி விரைவாக கடந்த இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை அரங்கேற்றியுள்ளார். 4,000 ரன்களை கடக்க, சூர்யகுமார், 2714 பந்துகளை எதிர்கொண்டார். இதற்கு முன், கே.எல். ராகுல், 2820 பந்துகளில் 4,000 ரன்களை எடுத்ததே ஒரு இந்திய வீரரின் அதிவிரைவான ஸ்கோராக இருந்தது. ஒட்டு மொத்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில், ஏ.பி.டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் 2658 பந்துகளில் 4,000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளனர். லக்னோ அணிக்கு எதிரான அதே போட்டியில், சூர்யகுமார் 4 சிக்சர்களை விளாசினார். அதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் 150 சிக்சர்கள் விளாசிய வீரராக அவர் உருவெடுத்துள்ளார்.

 

The post ஜெட் வேகத்தில் 4,000 சூர்யகுமார் சாதனை appeared first on Dinakaran.

Tags : Suryakumar ,IPL ,Lucknow ,Mumbai ,Suryakumar Yadav ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்