×

பிரியன்ஷ் – பிரப்சிம்ரன் அசத்தல் சாதனை

கொல்கத்தா அணிக்கு எதிரான 44வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக ஆடி ரன் வேட்டையாடியது. இவர்கள், 11.5 ஓவர்களில் 120 ரன்கள் குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம், பஞ்சாப் அணிக்காக அதிக ரன் குவித்த 2வது இணை என்ற சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். பஞ்சாப் அணிக்காக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் குவித்தோர் பட்டியலில், விருத்திமான் சாஹா, மனான் வோரா இணை, 129 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளது. இப் பட்டியலில், 116 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் 2வது இடத்தில் இருந்த, கிறிஸ் கெயில், கே.எல். ராகுல் இணை, பிரியன்ஷ், பிரப்சிம்ரன் அதிரடியால், 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

The post பிரியன்ஷ் – பிரப்சிம்ரன் அசத்தல் சாதனை appeared first on Dinakaran.

Tags : Priyansh ,Prabsimran ,Priyansh Arya ,Prabsimran Singh ,Punjab ,Kolkata ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்