×

குமாரசாமி நகரில் டூவீலர் திருட்டு

திருப்பூர், ஏப்.26: திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே குமாரசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஷபி. இவர் கடந்த 23ம் தேதி இரவு தனது டூவீலரை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது டூவீலர் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது, நேற்று முன்தினம் அதிகாலை 2.50 மணிக்கு மர்ம ஆசாமிகள் 2 பேர் நடந்து வருவதும், அதில் ஒருவர் பொதுமக்கள் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிடுவதும், மற்றொருவர் டூவீலரை திருடிய பின்னர், இருவரும் அதில் ஏறிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குமாரசாமி நகரில் டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kumaraswamy Nagar ,Tiruppur ,Shabi ,Dinakaran ,
× RELATED குப்பை கொட்டிய வாகனத்திற்கு ரூ.8000 அபராதம்