- ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு
- மதுரை
- மதுரை உயர் நீதிமன்றம்
- பாண்டியராஜன்
- சரண்யா
- பிரசாந்த்
- முரதம்பத்ரி
- கீரதுரை

மதுரை: மதுரை, கீரைத்துறை பகுதியில் கடந்தாண்டு 25 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (23), இவரது மனைவி சரண்யா (20), தம்பி பிரசாந்த் ஆகிய மூவருக்கும் 12 ஆண்டு சிறை தண்டைனை விதித்து மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் தீர்ப்பளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மதுரை அண்ணாநகர் பகுதியில் குடியிருக்கும் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமாரின் வீட்டிற்கு எஸ்ஐ மற்றும் இரு காவலர்களைக் கொண்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post கைதிகள் மிரட்டல் எதிரொலி: நீதிபதி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.
