- மார்க்சிச கம்யூனிச
- சாஸ்திரப் பவன்
- சென்னை
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்,
- ஆ.ப.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சன்முகம்
சென்னை: சென்னை சாஸ்திர பவனை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.3,000 கோடியை விடுவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2,000 கோடியை உடனே வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்கள் ரயில் கட்டண சலுகையை உடனே அமல்படுத்த வேண்டும். இனி ஒரு நொடி கூட ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை தொடரக்கூடாது. சட்டத்துக்கு விரோதமாக துணை வேந்தர் மாநாட்டை ஆளுநர் கூட்டியுள்ளார்” என ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் பேசியுள்ளார்.
The post சென்னை சாஸ்திர பவனை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் appeared first on Dinakaran.
