- திமிதி விழா
- காளியம்மன் கோயில்
- இடிபதி
- சின்னமாரியம்மன்
- பெரியமாரியம்மன்
- கரிய காளியம்மன் கோவில்
- கல்வடங்கம் காவிரி நதி
- திமிட்டி திருவிழா
இடைப்பாடி, ஏப்.25: இடைப்பாடி அருகே, கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன், கரியகாளியம்மன் கோயில் விழா தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று காலை தீமிதி விழா நடந்தது. முதலில் பூசாரி கரகத்தை தூக்கியபடி தீ மிதித்தார். தொடர்ந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, பெண்கள் அலகு குத்தியவாறும், கைக்குழந்தைகளை தூக்கியபடியும் வேண்டுதல் நிறைவேற்றினர். சில தம்பதியினர் குண்டம் மிதித்தவாறு குழந்தைகளுக்கு பால் புகட்டினர். தொடர்ந்து பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் வழிபட்டனர்.
The post காளியம்மன் கோயிலில் தீமிதி விழா appeared first on Dinakaran.
