×

பெங்களூரு வழியாக அமெரிக்கா சென்றார் உள்துறை இணை அமைச்சராக மாட்டேன்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்திலிருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் பெங்களூரு வழியாக நேற்று மாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவர் அளித்த பேட்டி: காஷ்மீரில் மிகவும் துயரமான, துக்கமான நிகழ்வு நடந்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருமே அங்கு சுற்றுலா சென்று இருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்படி எல்லாம் ஒரு மனிதன் செய்வானா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அங்கு தீவிரவாதிகள் மக்களை வரிசையாக நிறுத்தி, இஸ்லாமியர்களா, இந்துவா என கேட்டு, இந்து மக்களை சுட்டுக் கொன்றதாக, அங்கு பாதிக்கப்பட்ட மக்களே பேட்டி கொடுத்துள்ளனர். ஆனால் தாக்குதலுக்கு பிறகு காயமடைந்தவர்களை, காப்பாற்ற முதலில் வந்தவர்களும் இஸ்லாமியர்கள்தான். தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும். நான் உள்துறை இணை அமைச்சராக ஆகப்போவதில்லை. நான் உங்களோடுதான் இருக்கப் போகிறேன்.

The post பெங்களூரு வழியாக அமெரிக்கா சென்றார் உள்துறை இணை அமைச்சராக மாட்டேன்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : US ,Bangalore ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,president ,United States ,Air India ,Chennai airport ,Kashmir ,USA ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...