×

நிதிநிலை அறிவிப்பு பணிகளை விரைவில் துவங்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்


சென்னை: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று 2025-26 நிதி ஆண்டின் நிதிநிலை அறிவிப்பு பணிகள் குறித்து நிர்வாக ஒப்புதல் பெற மதிப்பீடுகளை விரைவாக தயாரித்து அரசின் அனுமதி பெறவும், திட்ட அறிவிப்புகளான அணைக்கட்டுகள், தடுப்பணைகள், படுகை அணைகள், நீரொழுங்கிகள், பாலங்கள், கட்டுமானங்களை புனரமைத்தல், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் ஆழ்துளை கிணறுகள் போன்ற பணிகளை விரைவில் துவங்க மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், 2025-26ம் நிதி ஆண்டிற்கான டெல்டா மாவட்டங்களில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், மேட்டூர் உள்பட அனைத்து மண்டலங்களைச் சார்ந்த 1071 பணிகளை 6179.60 கி.மீ  நீளத்திற்கு, ரூ.120 கோடி மதிப்பீட்டில், குறித்த காலத்திற்குள் துரிதமாக தூர்வாரி கடை மடை வரை தடையின்றி நீர் செல்வதற்கு, பணிகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை ஆய்வு செய்து விரைவில் பணிகளை நிறைவு செய்ய மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

The post நிதிநிலை அறிவிப்பு பணிகளை விரைவில் துவங்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister Duraimurugan ,Chennai ,Water Resources ,Minister ,Duraimurugan ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்