- மாயமன் கோயில் திருவிழா.
- ஊட்டி
- ஊட்டி மாயமன் கோவில் திருப்பணி விழா
- ஊட்டி சிட்டி
- மாயமான்
- நீலகிரி மாவட்டம்…
- தின மலர்
ஊட்டி, ஏப். 17: ஊட்டி மாாியம்மன் கோயில் திருத்தோ் விழா நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடந்த நிலையில் ஊட்டி நகரில் 40 டன் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. நீலகிாி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக ஊட்டி மாாியம்மன் கோயில் விளங்கி வருகிறது. ஊட்டி நகாின் மையப்பகுதியில் சந்தைக்கடையை ஒட்டி அமைந்துள்ளதால், சந்தைகடை மாாியம்மன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் தோ் திருவிழா வெகுவிமா்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஊட்டி மாாியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி துவங்கியது.
நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் தேர்பவனி நடந்த நிலையில், நேற்று முன்தினம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் ஊர்வலம் நடந்தது. தேர் பவனியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ஊட்டி ஐந்துலாந்தர், புளூ மவுண்டன், மெயின் பஜார் சாலை, லோயர் பஜார் சாலை, காபி அவுஸ், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு தூவி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, தேர் நேற்று அதிகாலை மீண்டும் கோயிலை அடைந்தது.
இந்நிலையில் தற்காலிக கடைகள் அமைத்திருந்த பகுதிகள், ஐந்து லாந்தர் பகுதியில் உப்பு, பிளாஸ்டிக், பூ உள்ளிட்ட ஏராளமான குப்பைகள் குவிந்திருந்தன. இவற்றை நேற்று காலை 6 மணி முதல் ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் 80க்கும் மேற்பட்டோர் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். நகராட்சி நகர்நல அலுவலர் சிபி மேற்பார்வையில் அனைத்து பகுதிகளிலும் குவிந்திருந்த சுமார் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
The post மாாியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு நகரில் குவிந்த 40 டன் குப்பைகள் அகற்றம் appeared first on Dinakaran.
