- ஆசிரியர் கூட்டணி
- சிங்கம்புணரி
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி
- ஜனாதிபதி
- பிரதச்சித்தம்பி
- முத்துபாண்டியன்
- ஜீவா ஆனந்தி
- தின மலர்
சிங்கம்புணரி, ஏப். 12; தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டியன், ஜீவா ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். பொருளாளர் கலைச்செல்வி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
கூட்டத்தில், சங்கத்தின் 7வது மாநில மாநாடு மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் சிவகங்கையில் இருந்து ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது, சிவகங்கை ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டிய இணையதள நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ரவி, குமரேசன், மாவட்ட துணை தலைவர்கள் அமல சேவியர், சேவியர் சத்தியநாதன், கல்வி மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஜோசப், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஆசிரியர் கூட்டணி ஆலோசனை appeared first on Dinakaran.
