- தமிழக அரசு…
- பிஎம்எம். எம்.
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- மேட்டூர் எஸ். சதாசிவம்
- பா.ம.க.
- சேலம் மாவட்டம்
- சென்னை
- மேட்டூர்
- தின மலர்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் மேட்டூர் எஸ்.சதாசிவம் (பாமக) பேசியதாவது: சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் என்பது ஒரு பெரிய மாவட்டம். 11 தொகுதிகள் கொண்ட மாவட்டம். மூன்றாகப் பிரிக்க வேண்டும். மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், சேலம் மாவட்டம் என மூன்றாகப் பிரிக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர் நிதியை 5 கோடி ரூபாயாக கொடுக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினருக்கு கார் கொடுக்க வேண்டும். நகராட்சியில் 500 ஓட்டுகள் வாங்குகிறவர்களுக்கு ஒரு கார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் 65 கிலோ மீட்டர் சுற்றி வருகிறேன். மக்கள் சேவை செய்கிறோம். தமிழ்நாடு அரசு என்று போட்ட காரை கவுரமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழ்நாடு அரசு என்று போட்ட கார் கொடுங்க…பாமக எம்எல்ஏ ஆசை appeared first on Dinakaran.
