லக்னோ அணியுடனான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 209 ரன் குவித்தது. இமாலய இலக்கை விரட்டிப்பிடிக்க முயன்ற டெல்லி அணி, 65 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றது. இருப்பினும் அந்த அணி வீரர் அசுதோஷ் சர்மா, தனி ஒருவனாக நின்று அதிரடி காட்டினார். 31 பந்துகளை சந்தித்து 66 ரன்களை அவர் குவித்ததால் டெல்லி திரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 7வது விக்கெட்டுக்கு அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன், 2009ல், யூசுப் பதான், 62 ரன் குவித்ததே சாதனையாக இருந்து வந்தது. வெளிநாட்டு வீரர்களில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக 7வது வீரராக களமிறங்கிய டுவைன் பிரேவோ 68 ரன் குவித்து ஒட்டு மொத்த சாதனையில் முதலிடத்தில் உள்ளார்.
The post அசுதோஷ் அபார சாதனை appeared first on Dinakaran.
