×

பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவருக்கு திடீர் நெஞ்சுவலி

சிவகிரி: தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கோட்டை தெருவை சேர்ந்த மாரிச்சாமி மகன் கவின்பிரதாப் (17). வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவர் நேற்று நடைபெற்ற வணிகவியல் தேர்வை எழுதிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவர் வாசுதேவநல்லூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

The post பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவருக்கு திடீர் நெஞ்சுவலி appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Tamil Nadu ,Kavin Pratap ,Marichamy ,Vasudevanallur Kottaya Street, ,Tenkasi district ,Vasudevanallur Government Higher Secondary School… ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்