- Ponkumar
- சென்னை
- தமிழ்நாடு விவசாயிகள் கட்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- தின மலர்
சென்னை:தமிழ்நாடு விவசாயிகள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பெருமளவு தொகுதிகளை இழந்து, வஞ்சிக்கப்படும் நிலையை தடுத்து நிறுத்திட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் முயற்சிகள் மிகுந்தப் பாராட்டுதலுக்கும் வரவேற்பிற்கும் உரியதாகும். மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை செய்வதன் மூலம் தமிழ் நாட்டுக்கு தொகுதிகள் குறைவதை தடுப்பதற்கும், விகிதாசார அடிப்படையில் மறு வரையறை செய்வதன் மூலம் தமிழ் நாட்டுக்கு கூடுதலாக நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைப்பதற்கும் தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி ஏற்றுவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு தீராத அப்பட்டமான துரோகத்தை அண்ணாமலையும் அவரது தலைமையிலான பாஜகவும் செய்துள்ளது.
இது வன்மையானக் கண்டனத்திற்குரியது. மக்கள் தொகை கட்டுப்படுத்த வேண்டுமென்ற ஒன்றிய அரசின் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய மாநிலங்கள் எந்த வகையிலும் இந்தத் திட்டத்தின் மூலம் பாதிக்ககூடாது என்பதற்காக இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்குமான ஒரு பொதுப் பிரச்சனையாகும். அரசியல் செய்வதற்கு ஆயிரம் களங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு மக்களின், மண்ணின் ஒரு அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதற்கு எடுக்கக்கூடிய முயற்சிக்கு ஒத்துழைப்பு தராவிட்டாலும் துரோகம் செய்யாமல் இருப்பது அண்ணாமலைக்கும் அந்த கட்சிக்கும் நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம்; முதல்வரின் முயற்சி பாராட்டுக்குரியது; பொன்குமார் வரவேற்பு appeared first on Dinakaran.