×

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம், மார்ச் 21: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார கல்வி அலுவலர் முருகேஸ்வரி துவக்கி வைத்து அரசு பள்ளியில் படிப்பதன் அவசியம் பற்றி எடுத்து கூறினார். மாணவ-மாணவிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளியில் படித்தால் கிடைக்கும் சலுகைகள் குறித்து வில்லுப்பாட்டு மூலம் எடுத்து கூறப்பட்டது. கலைத்திருவிழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தலைமையாசிரியர் சகாயம் பரிசு வழங்கினார். இதில் பெற்றோர், கிராம பொதுமக்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் உதயகுமார் கூறினார்.

The post அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Student Admission Awareness Rally in Government School ,Ramanathapuram ,Thirupullani Union Panchayat ,Union Primary ,School ,District Education Officer ,Murugeswari ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...