×

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க தொடர்ந்து அனுமதி மறுப்பு: கனிமொழி எம்.பி. பேட்டி

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகஅவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிரான வாசகம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வரக் கூடாது என புதிய உத்தரவை சபாநாயகர் பிறப்பித்தார். இதற்கு முன் எத்தனையோ உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாசகம் பொறித்த முகக் கவசங்களை அணிந்து வந்திருக்கிறார்கள். சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க தொடர்ந்து அனுமதி மறுப்பு: கனிமொழி எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Delhi ,DMK Parliamentary Group ,President ,Dinakaran ,
× RELATED இமாச்சலில் 500 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 14 பேர் பலி