சிம்லா: இமாச்சல பிரதேசம், சிம்லாவில் இருந்து குப்வி என்ற இடத்திற்கு ராஜ்கார் வழியாக நேற்று தனியார் பஸ் சென்றது. இந்த பஸ் சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
