×

சாம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப் சமாதியைச் சுற்றி தடுப்புகள் அமைப்பு!!

மராட்டியம்: சாம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஔரங்கசீப் கல்லறையைப் பராமரித்து வரும் இந்திய தொல்லியல் துறை, அதைச் சுற்றி பாதுகாப்புக்காக தடுப்பு அமைத்துள்ளது. ஔரங்கசீப் கல்லறையைத் தகர்போம் என்று வி.எச்.பி., பஜ்ரங்தளம் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்தன. ஔரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி வி.எச்.பி., பஜ்ரங்தள் அமைப்புகள் நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து பல வட்டாரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post சாம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப் சமாதியைச் சுற்றி தடுப்புகள் அமைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Aurangasib Samad ,Chambajinagar district ,Mughal King Aurangzeeb ,Champaginagar district ,Department of Archaeology of India ,Aurangaseeb Tomb ,V. ,Aurangasib tomb ,H. ,BP ,Bajrangtalam ,Dinakaran ,
× RELATED இமாச்சலில் 500 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 14 பேர் பலி