- முதல் அமைச்சர்
- அமைச்சர்
- பொன்முடி
- சென்னை
- Okenakal
- பென்னாகரம்
- தரும்புரி
- Tirupathur
- Bhamaka
- சட்டமன்ற உறுப்பினர்
- ஜி.கே.
- ஒன்றிய மாநிலம்
சென்னை :”ஒகேனக்கல் – பென்னாகரம் – தருமபுரி – திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுமா?” என பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, “வனத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடையில்லா சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தடையில்லா சான்று பெற்றதும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும். அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.துறைகளுடன் இணைந்து பேசி இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு : அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.
