மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று அமெரிக்க வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்தனர். அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று அமெரிக்க வீராங்கனைகள் டெய்லர் டவுன்சென்ட் – ஆன் லீ இடையே முதல் சுற்றுப் போட்டி நடந்தது. அதில் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் டவுன்சென்ட் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஹேலி பாப்டிஸ்ட் – செர்பிய வீராங்கனை ஒல்கா டேனிலோவிக் மோதினர்.
முதல் இரு செட்களில் ஆளுக்கொன்றை அவர்கள் கைப்பற்றினர். பரபரப்பாக நடந்த 3வது செட்டை ஹேலி எளிதில் கைப்பற்றினார். அதனால், 6-3, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் ஹேலி வென்றார். இன்னொரு முதல் சுற்றுப் போட்டி அமெரிக்க வீராங்கனை சோபியா அன்னா, செக் வீராங்கனை பெட்ரா கிவிடோவா இடையே நடந்தது. அந்த போட்டியில் அமெரிக்க வீராங்கனை கெனின், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க வீராங்கனை ஆஷ்லின் க்ருகர் – மெக்சிகோ வீராங்கனை ரெனாடா ஸராஸு இடையே நடந்த போட்டியில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் க்ருகர் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
The post மியாமி ஓபன் டென்னிஸ்: ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க வீராங்கனைகள் appeared first on Dinakaran.