×

வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

செங்கல்பட்டு: தமிழ்நாடு காவல்துறை மூன்றாவது முறையாக அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியை நடத்துகிறது. 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி 2024-2025 செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் 17.03.2025 முதல் 22.03.2025 வரை நடைபெறுகிறது.

25வது அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியின் பிரம்மாண்டமான தொடக்கவிழா ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் கவாத்து மைதானத்தில் நடைபெறுவது தமிழக காவல்துறையின் பெருமைக்கு ஒரு மைல் கல் ஆகும். 25வது அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் / படைத்தலைவர் சங்கள் ஜீவால், துவக்கி வைத்தார்.

25வது அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி 2024-25ன் தலைவர் / ஏற்பாட்டு செயலாளர் காவல்துறை கூடுதல் இயக்குநர் தினகரன், தலைமை விருந்தினர் அவர்களை வரவேற்று, ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள், நடுவர் குழுவினர்கள், மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். பின்னர் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர்/படைத்தலைவர் காவல்துறையினரின் அலங்கார அணிவகுப்புக்காப்பு மற்றும் கவாத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். துலைமை விருந்தினர் தமிழ்நாடு காவல்துறைபின் தனிச்சிறப்பு வாய்ந்த சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை அங்கீகரிக்கும் உயரிய அங்கீகாரமான குடியரசு தலைவரின் நிஷான் வண்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

தினகரன் காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆப்பரேஷன்ஸ் வரவேற்புரையாற்றினார்கள். தலைமைவிருந்தினர் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் /படைத்தலைவர் சங்கர்ஜிவால், நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் வீரர்களிடையே துப்பாக்கி சுடும் போட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் துப்பாக்கி சுடுதல் போட்டி நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளுவதற்கு பயிற்றுவிக்கிறது என்றும் கூறினார்.

25-வது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 ஐ. தலைமைவிருந்தினர் அகில இந்திய காவல் கட்டுப்பாட்டு வாரியகொடியை ஏற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கொடிகள் ஏற்றப்பட்டன. துவக்கவிழா நிகழ்வு சத்தியபிரமாணம் எடுத்தும், தலைமை விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கியும் நிறைவுற்றது.

The post வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி appeared first on Dinakaran.

Tags : All India Police Shooting Competition ,Chengalpattu ,Tamil Nadu Police ,All-India Police Shooting Competition ,25th ,Chengalpattu District ,Tamil Nadu Commando School Training Complex ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...