×

காப்பீட்டில் அந்நிய முதலீட்டை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 19: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். அகில பாரத பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட செயலாளர் மாதவன், துணைச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் 95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பொது சொத்துக்களை விற்று பணமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க போதுமான நிதி ஒதுக்க வேண்டும். காப்பீடு மற்றும் நிதித்துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post காப்பீட்டில் அந்நிய முதலீட்டை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Bharatiya Mazdoor Sangha ,Tiruppur Collectorate ,Lakshmi Narayanan ,All India ,Jayaprakash ,Dinakaran ,
× RELATED சாலையில் கொட்டி கிடந்த காங்கிரீட் கலவையை அகற்றிய போலீசாருக்கு பாராட்டு