×

தஞ்சை சுவாமிமலை கோயிலுக்கு மின்தூக்கி கேட்ட இஸ்லாமிய எம்எல்ஏ: பணிகள் ஜூன் மாதம் நிறைவுபெறும் -அமைச்சர் அறிவிப்பு

கேள்வி நேரத்தின் போது எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேசுகையில், சுவாமிமலை கோயிலுக்கு மின்தூக்கி வசதியை செய்து தரப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைத்தேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் அந்தக் கோரிக்கையை ஏற்று பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் எப்போது நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற இந்த அரசினுடைய கொள்கையின்படி இந்து கோயில்களுக்கு உறுப்பினர் இஸ்லாமிய நண்பர் திருக்கோயிலுக்கு மின்தூக்கி கேட்டவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து ரூ.3 கோடி 55 லட்சம் செலவில் அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரும் ஜூன் மாத இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்பெற்று நானும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து அந்த மின்தூக்கியை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் ஜூன் மாதத்திற்குள் கொண்டு வருவோம் என்றார்.

The post தஞ்சை சுவாமிமலை கோயிலுக்கு மின்தூக்கி கேட்ட இஸ்லாமிய எம்எல்ஏ: பணிகள் ஜூன் மாதம் நிறைவுபெறும் -அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Islamic MLA ,Thanjavur Swamimalai temple ,M.H. ,Jawahirullah ,MLA ,Swamimalai temple ,Chief Minister ,M.K. Stalin ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...