×

இறுதியில் சுருதி குறைந்த சபலென்கா: டீனேஜு… போராடு…சாம்பியன் மிர்ரா

இண்டியன் வெல்ஸ்: இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரைனா சபலென்காவை வீழ்த்தி ரஷ்ய இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (17) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா (26), ரஷ்யாவை சேர்ந்த 9ம் நிலை வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா களம் கண்டனர்.

ஏற்கனவே நடப்பு சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக்கை (போலந்து) வீழ்த்திய உற்சாகத்தி்ல் மிர்ரா களமிறங்கினார். ஆனால் முதல் செட்டை நம்பர் ஒன் வீராங்கனைக்கு உரிய வேகத்தில் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் சபலென்கா கைப்பற்றினார். ஆனால் அடுத்து 2 செட்களில் மிர்ரா அதிரடியாக விளையாடி சபலென்காவை திணறடித்தார். அதனால் அந்த 2 செட்களையும் 6-4, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் மிர்ரா வசப்படுத்தினார். 2 மணி 4 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் மிர்ரா 2-1 என்ற செட்களில் வென்றார். அதன் மூலம் இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இளம் சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றார்.

The post இறுதியில் சுருதி குறைந்த சபலென்கா: டீனேஜு… போராடு…சாம்பியன் மிர்ரா appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Mirra ,Indian Wells ,Mirra Andreeva ,Aryna Sabalenka ,Belarus ,Indian Wells Open ,Dinakaran ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!